பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?
பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு தொப்பை ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று. சுகப்பிரசவம் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ குழந்தை பிறக்கும் போது அதன் காரணமாக தொப்பை ஏற்படுவது இயற்கையான நிகழ்வு. இதை எளிதில் குறைக்கலாம். பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையால் பெண்களின் உடலில் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் உடுத்தும் உடையில் இருந்து உண்ணும் உணவு வரை பல்வேறு மாற்றங்கள் காணப்படும். மேலும் இந்த தொப்பையால் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதையும் படிங்க: கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா? அனைத்து பெண்களின் பெரும்பாலான விருப்பம் தான் அழகாக இருக்க வேண்டும் என்பது தான். அதிலும் தற்போது உள்ள இளம்வயது தாய்மார்கள் தங்களின் அழகு மீது அதிகளவு கவனம் செலுத்துகின்றனர். பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் தொப்பையால் தனது அழகு குறைந்துவிட்டது என எண்ணி கவலைகொள்கின்றனர். மேலும் இந்த தொப்பையால் விரும்பிய ஆடைகளை அணியமுடியாமல் மேலும் மனதளவில் வருத்தப்படுகின்றனர். பல பெண்கள் தங்களின் தொப்பையை குறைக்க உணவு சாப்பிடாமல் ...