உடல் எடையை உடனே குறைக்க உதவும் ஓட்ஸ்

 Oats Drink for Weight Loss | உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ்

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது என்பது சவாலான ஒன்று. உடல் எடையை சரியாக பராமரிக்க டயட் மற்றும் தினசரி உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று. டயட் மற்றும் தினசரி உடற்பயிற்சி மட்டும் உடல் எடையை குறைக்காது. சரியான உணவு பொருட்களை உட்கொள்ளவதின் மூலமாக உடல் எடையை நாம் குறைக்கலாம். முக்கியமாக ஓட்ஸ் பானம் உடல் எடையை வேகமாக குறைக்க(Oats drink for Weight Loss) உதவுகிறது.

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க உதவும் முக்கியமான உணவு பொருள் ஓட்ஸ் தான். ஓட்ஸ் மிகவும் பிரபலமான உணவு பொருள் ஆகும். தற்போது பலரின் தினசரி காலை உணவு இந்த ஓட்ஸ் தான். ஓட்ஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

1. எடை குறைப்பு

உடல் எடையை குறைப்பதில் ஓட்ஸ் முக்கியபங்காற்றுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் ஓட்ஸை பானமாக தயார் செய்து தினமும் குடிக்கலாம்.தினசரி ஓட்ஸ் பானம் குடித்து வந்தால் நம் உடல் எடை குறைவதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.

2. கலோரி

ஓட்ஸில் கலோரி மிகவும் குறைவு. மேலும் இதில் வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவை அதிகமாக உள்ளது. இதை காலை உணவாக உட்கொள்ளும் பொழுது வயிற்றை எளிதில் நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது.

3. நார்ச்சத்து

ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இது உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

4. கல்லீரல் செயல்பாடு

கல்லீரல் சிறப்பாக செயல்பட லெசித்தின் உற்பத்தி மிகவும் முக்கியமான ஒன்று. ஓட்ஸில் உள்ள அமினோ அமிலங்கள் லெசித்தின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. பாஸ்போலிபிட் எனப்படும் கிளுப்பு அமிலம் கல்லீரலில் உள்ள கொழுப்புகளை செரிமான மண்டலத்திற்கு அனுப்பி செரிக்க உதவுகிறது. இதனால் கல்லீரலில் கொழுப்பு சேராமல் கல்லீரல் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு கல்லீரல் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

5. சிறுநீரக செயல்பாடு

ஓட்ஸ் சிறுநீரக செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகிறது. உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம் உடலில் உள்ள அதிகப்படியான நீர் தான். ஓட்ஸ் உடல் எடை அதிகரிக்க காரணமான அதிகப்படியான நீரை சிறுநீர் வழியாக வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ஓட்ஸ் பானம் செய்வது எப்படி?

முதலில் ப்ளெண்டரில் ஓட்ஸ் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, பின்பு அதில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து, 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதில் மேலும் சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். வடிகட்டி பயன்படுத்தி, அந்த ஓட்ஸ் கலவையை வடிகட்டிக் கொள்ளவும். இறுதியாக சுவைக்கு ஏற்ப, அந்த பானத்தில் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ் பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் ஓட்ஸ் குடிக்க வேண்டும். மேலும் மூன்று வேளையும் உணவு சாப்பிடும் போது குடிப்பதற்கு நீருக்கு பதிலாக ஓட்ஸ் பானம் பருகலாம்.

Comments

Popular posts from this blog

நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?