செவ்வாழையின் மருத்துவ குணங்கள்
Health Benefits of Red Banana | செவ்வாழையின் மருத்துவ குணங்கள்
செவ்வாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. மற்ற வாழைப்பழங்களை விட செவ்வாழையில் மிகவும் குறைந்த அளவே கலோரிகள் உள்ளன.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை ஒரு செவ்வாழை சாப்பிட்டு வரலாம். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
- குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தினமும் ஆளுக்கு ஒரு செவ்வாழை சாப்பிட்டு அரை டீஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக கருத்தரிக்கும்.
- ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழை என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இதனால் நரம்புகள் பலம் பெரும், ஆண்மைத்தன்மை அதிகரிக்கும்.
- கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என்று 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும்.
- மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என 40 நாட்கள் இரவு உணவிற்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் சரியாகும்.
- செரிமான கோளாறு, மலச்சிக்கல் மற்றும் மூல நோய் உள்ளவர்கள் தினசரி ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், நோயிலிருந்து படிப்படியாக குணமடையலாம்.
- சருமநோய் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை என தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சருமநோய் குணமாகும்.
- நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். இதனால் உடல் பலம் பெரும்.
- உடலில் நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க வாரம் ஒரு செவ்வாழை சாப்பிடலாம். செவ்வாழை நோய் தொற்று கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது.
- தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கலாம்.
- தினமும் ஒரு செவ்வாழை என தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பற்களின் ஈறுகள் பலம் பெரும். பல்வலி குணமாகும். ஆடும் பற்கள் கெட்டியாகும்.

Comments
Post a Comment