கர்ப்ப கால தாம்பத்தியம் சிசுவை பாதிக்குமா?

 


கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுடன், மன அழுத்தம் இல்லாமல், கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அன்பாக, அனுசரணையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு தாம்பத்தியம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.

சமூகம் தழைத்தோங்க ஆண் – பெண் உறவு என்பது அவசியமான ஒன்று. பசி, தாகம் போல் தாம்பத்தியம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் அத்தியாவசியமான உணர்வு. நம் முன்னோர்கள் கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அவசியம், அதன் மூலம் சுகப்பிரசவம் ஆகும் என வலியுறுத்தியுள்ளனர்.  எனவே கர்ப்ப காலத்தில் உறவு கொள்வது என்பது தவறு அல்ல.

கர்ப்ப காலத்தில் உறவுகொள்ளக் கூடாது என்று சொல்வதும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை ஏற்படுவதை தண்டனைக்குரிய குற்றம் போல் சித்திரிப்பதும் விந்தையாக உள்ளது. கருத்தரித்த நாளில் இருந்து பெண் தாம்பத்திய உறவுகொள்ளக் கூடாது என்பது தனி மனித உரிமைக்கு விரோதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் உள்ளது.

கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு அறவே கூடாது என்று ஒருசிலர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்ப்பம் உறுதியானதும் ஒரு மாதம் ரொம்ப ஹார்ஷா வேண்டாம் என்று கொஞ்சம் தவிர்க்க சொல்லலாம். அதற்கு பின்பு மனைவிக்கு எந்த மறுப்பும் இல்லையெனில் எப்பவும் போல தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம்.

தாம்பத்திய உறவால்  வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. குழந்தை நன்றாக பாதுகாப்பாக  தாயின் பனிக்குடத்தில் தான் வளரும். கர்ப்பமாக இருக்கும் பெண் உடல் அளவில் சௌகரியமாக பீல் பண்ணினால் அதற்கேற்றாற்போல் இரண்டு பேரும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம்.

சில பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகியிருக்கும். சிலருக்கு நச்சுக்கொடி கீழ் நோக்கி இறங்கி இருக்கும், சிலருக்கு கர்ப்பவாய் பிரசவிக்கிற காலத்துக்கு முன்னாடியே திறந்திருக்கும். இந்த மாதிரி சில உடலளவில்  பிரச்சனை உள்ளவர்கள் சில குறிப்பிட்ட காலம் மட்டும் தாம்பத்திய உறவை தவிர்க்கலாம்.

இது தவிர எச்.ஐ.வி நோயாளிகள் கண்டிப்பாக தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். சில இன்ஃபெக்‌ஷன் உள்ளவர்களும் குறிப்பிட்ட காலம் வரை தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான சாப்பாட்டோடு, மன அழுத்தம் இல்லாமல், கணவன் – மனைவி ஒருவருக்கு ஒருவர் அன்பாக, அனுசரணையாக இருத்தல் அவசியம். கணவன் – மனைவிக்கு இடையேயான தாம்பத்தியம் அவர்களுக்கு இடையில் உள்ள பாசப்பிணைப்பை அதிகப்படுத்தும்.

கர்ப்பகாலத்தில் கணவன் – மனைவி இருவரும் அவர்கள் பரிசோதனைக்கு செல்லும் மருத்துவர்கள் என்ன வழிமுறைகள் சொல்கிறார்களோ அதை பின்பற்றினாலே நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றடுக்கலாம்.


Comments

Popular posts from this blog

நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?