Posts

Showing posts from April, 2026

கூந்தல் அடர்த்தியாக வளர டிப்ஸ்

Image
வெந்தயத்தை நன்றாக அரைத்துத் தலையில் தடவிக் குளித்து வந்தால், தலை முடி பளபளப்பாகவும், அடர்த்தியாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும். வெந்தயத்தை சரியாக உணவில் சேர்த்துக் கொள்வதால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படுகிறது. தேங்காய் எண்ணெயில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து, தினமும் இரவில் அந்த எண்ணெயை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து காலையில் குளித்து வந்தால் கூந்தல் உதிர்வது கட்டுப்படும். ஒரு பிடி அளவு வேப்பிலையை எடுத்து நீரில் நன்றாக வேக வைத்து ஒருநாள் கழித்து மீண்டும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடி கொட்டுவது நின்று விடும். மேலும் பேன் தொல்லை ஒழியும். நரை முடிஉள்ளவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்க அவுரி இலை மற்றும் மருதாணி இலை இரண்டையும் நன்றாக இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவ வேண்டும். முடியின் நிறம் உடனே மாறுவதை காணலாம். செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வந்தால் தலைமுடி நன்கு வளரும். நரைமுடி மறைய, தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் குடித்து வந்தால் நரைமுடி மறைந்து முடியின் நிறம் கரும...