பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்பு வறட்சியும் தீர்வும்
பெண்களின் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவது என்பது அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை. ஆனால் இந்த வறட்சியானது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதே, பிறப்புறுப்பு வறட்சிக்கு முக்கியக் காரணமாகும். பெரும்பாலும் மாதவிடாய் நிற்கும் போது பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும். ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் தான் பிறப்புறுப்பில் உயவுப் பொருளாக செயல்பட்டு, பிறப்புறுப்பு பகுதியை எப்பொழுதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். எனவே ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டால் தான் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் போதோ அல்லது பிரசவ காலத்தின் போதோ பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி தற்காலிகமாக குறைந்திருக்கும். இதனால் மற்ற காலங்களை விட இக்காலத்தில் பிறப்புறுப்பு வறட்சி ஏற்படும். புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் காரணமாகவும் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படலாம். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் சில நேரங்களில் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்பட வாய்ப்புண்டு. உடலுறவில் ஈடுபடும் முன்பு, போதிய அளவு பாலுணர்ச்சி தூண்டப்பட...