உடல் எடையை குறைக்கும் சப்ஜா விதை
சப்ஜா விதையின் நன்மைகள் | Health benefits of Sabja seeds சப்ஜா விதைன்னு நிறைய பேர் சொல்லி நாம் கேள்விபட்டிருப்போம். ஒரு சிலர்க்கு சப்ஜா விதைன்னா என்னனு கூட தெரியாது. சப்ஜா விதைன்னா வேற ஒன்னும் இல்ல நம்ம ஊருல கிடைக்குற திருநீற்று பச்சிலையோட விதை தான் இந்த சப்ஜா விதை. பார்க்க சாதாரணமாத்தான் தெரியும். அனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி கூல்டிரிங்ஸ் மற்றும் ஜூஸ் கூட தயாரிக்கலாம். இதை பால், நீர் அல்லது நன்னாரி சர்பத்தில் போட்டு குடிக்கலாம். ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் போட்டு ஊறவைத்தால் அது பன்மடங்காக அதிகரிக்கும். இரவில் ஊறவைத்து காலையில் பார்க்கும் போது சவ்வரிசி போன்று இருக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை ஊறவைக்காமல் அப்படியே சாப்பிட கூடாது. இது நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். மருத்துவ பயன்கள் உடல் எடையை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊறவைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். வயிற்றுப்புண் பிரச்சனைக்கு சப்ஜா விதை நல்ல ஒரு மருந்து. சர்க்க...